திடீரென சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் முளைத்த பச்சை நிற தூண்கள்: மர்மம் விலகியது
சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் திடீரென முளைத்த பச்சை நிற தூண்கள் வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தின.
நெடுஞ்சாலையில் திடீரென தோன்றிய பச்சை நிற தூண்கள்
ஜெனீவாவிலிருந்து Nyon செல்லும் நெடுஞ்சாலையில், சாலையோரமாக திடீரென பச்சை நிற தூண்கள் நிறுத்தப்பட்டிருப்பதை வாகன ஓட்டிகள் கவனித்துள்ளார்கள்.
பலரும், திடீரென முளைத்த அந்த பச்சை நிற தூண்களால் குழப்பம் அடைந்தார்கள்.
மர்மம் விலகியது
இந்நிலையில், அந்த தூண்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெடரல் சாலைகள் துறையால் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளின் ஒரு பாகம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அந்த தூண்களின் மீது மின்னணு அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட உள்ளன. அவை தற்காலிக வேகக் கட்டுப்பாடு தொடர்பில் சிக்னல்களைக் கொடுக்கவும், வாகன சாரதிகளுக்கு தகவல்களை அளிக்கவும் பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே ஜேர்மன் மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில் இந்தப் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதனால் 60 சதவிகிதம் வரை போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, Lausanne துவக்கி அடுத்து படிப்படியாக பல இடங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.