பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) தீர்மானித்துள்ளனர்.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 790 ரூபாவாகும்.
இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(NBC MEDIA NETWORK)