இன்று இரவு ஒரு மணித்தியால மின்வெட்டு?
இன்று (1) மாலை 6.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள், சுமார் ஒரு மணிநேர மின் துண்டிப்புஏற்படும் வாய்ப்பு உள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதிகரித்த மின்சார கேள்வியின் காரணமாக இந்த நிலை ஏற்படலாமென இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஜெனரேட்டர் மீண்டும் பழுதடைந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறினால் இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும், இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு 270 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) உறுதியளித்திருந்தார்.