இலங்கைக்கு விசேட விமான சேவையை ஆரம்பித்த நாடு
மலேசியாவிலிருந்து (Malaysia) இலங்கைக்கு விசேட விமான சேவை அரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா எயார்லைன்ஸ் (Malaysia Airlines) அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவை காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தவகையில் ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு (Colombo) மூன்று வாராந்திர அகல – உடல் விமானங்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விமான நிறுவனமானது ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொழும்பு-கோலாலம்பூர் வழித்தடத்தில் எயார்பஸ் A330 விமானங்களை நிறுத்தும்.
ஒவ்வொரு A330 விமானமும் 27 வர்த்தக சொகுசு இருக்கைகளையும் (Business Class seats) 261 பொருளாதார வகுப்பு இருக்கை (Economy Class seats) களையும் கொண்டுள்ளது.
தெற்காசியாவில் மலேசியா எயார்லைன்ஸின் இருப்பை வலுப்படுத்துவதையும், இலங்கை – மலேசியாவிற்கிடையிலான பயணம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.