இலங்கைக்கைக்கு மற்றுமொரு பேரிடி! எயார்லைன்ஸிலிருந்து வெளியேறும் விமானிகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரியும் சுமார் 40 விமானிகள் விரைவில் விமான சேவையை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அங்கு பணிபுரிந்த 30 விமானிகள் வேறு விமான நிறுவனங்களில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நிறுவனத்தின் முகாமைத்துவ பிரிவின் தலைவர் புத்திக மன்னகே என்ற பெண்ணின் செயற்பாடு காரணமாகவே பெரும்பாலான விமானிகள் விமான சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது..
விமானிகளுக்கு அவரிடமிருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, 282 ஆக இருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானிகளின் எண்ணிக்கை அடுத்த சில மாதங்களில் 200க்கும் குறைவாகக் குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விமானிகள் பற்றாக்குறையால் இலங்கை விமானங்களின் பயண நேர அட்டவணை இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இலங்கை விமானங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், ஒவ்வொரு விமான நிலையத்திலும் இலங்கை விமானங்களுக்கு ஒதுக்கப்பட்ட விமானங்களை நிறுத்தும் வசதிகள் இழக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமை நீடித்தால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.