இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் அபாயம்

ஈரான் – இஸ்ரேல் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரான் எடுத்துள்ள திடீர் தீர்மானத்தால் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் பிரதான விநியோக பதையான ஹார்முஸ் நதியின் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் பாராளுமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக பல நாடுகளில் கப்பல்கள் அந்தப் பாதையின் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கை உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கும் போக்கு அதிகமாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உணவகம்

தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு பேராசிரியர் காமினி வீரசிங்க, குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு ஆதரவு வழங்குவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் முன்வந்தால் எண்ணெய் விநியோகம் முழுமையாக சீர்குலையும்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் 2 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பல் உள்ளதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.

இலங்கை உணவகம்

இதனால் இலங்கையர்கள் அச்சமடைய தேவையில்லை. இந்த 2 மாத கையிருப்பை மிகவும் அவதானமாக பயன்படுத்த வேண்டும். 2 மாதங்களுக்கு முன்னர் இலங்கை மீண்டும் கொள்வனவு செய்ய வேண்டும்.

அதற்கமைய, சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனால் விலை அதிகரிக்க நேரிடும். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விநியோகமும் சில நேரங்களில் சரிவடையக்கூடும்” என பேராசிரியர் காமினி வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button