இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
இந்த வகையான மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடுவது பாதுகாப்பற்றது.
எந்தவொரு பணமும் செலுத்துவதற்கு முன் பணியகத்தின் அங்கீகாரம் பெற்ற முகவர்களை தொடர்புகொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகத்திற்கிடமான வேலைவாய்ப்பு விளம்பரங்களை வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையதளத்தில் அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.