இலவசக் கல்வி – சுகாதாரம் நாட்டின் அடிப்படை உரிமையாக்கப்படும்: சஜித் உறுதி!

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் நாட்டின் அடிப்படை உரிமையாக்கும் செயற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (06) இடம்பெற்ற தொழில் வல்லுனர்களுடனான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சஜித், “கொள்கைகளை வகுத்தல், மற்றும் செயற்படுத்தல், கண்காணித்தல், குறைகளைக் கண்டறிதல் போன்ற கொள்கை வட்டாரம், சரியான முறையில் செயல்படுகின்றதா? என்கின்ற பிரச்சினை காணப்படுகின்றது.

கொள்கை தயாரிப்பில் தரவுகளையும் சாட்சிகளையும் மையப்படுத்தி, அறிவியல் ரீதியாக முன்னெடுப்பதற்கு பதிலாக அவசரமாக முன்னெடுக்கப்படுகின்ற விடயமாக மாறி இருக்கிறது. இந்த முறையில் இருந்து வெளியேறி முன்னேற்றகரமான சமூகமாக செயற்பட வேண்டும்.

இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதோடு, இலவச சுகாதாரம் என்கின்ற நாமத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுகாதார சேவை கிடைக்கப் பெற்றதா என்று பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

தற்பொழுது இலவச சுகாதார சேவை காணப்பட்டாலும் அது இலவசமாக வழங்கப்படுகின்றதா என்கின்ற பிரச்சினை உண்டு. சுகாதாரத் துறையில் சிக்கல்கள் காணப்படுகின்றமையால் அவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டில் சுகாதாரத் துறையில் திறமையானவர்கள் இருப்பதனால் உலக நாடுகளில் அதிக கேள்வி இருக்கின்றது. எனவே சிந்தனையை சிதறவிடாமல் ஒருமித்த சிந்தனையோடு இருப்பது குறித்து யோசிக்க வேண்டும்.

வங்குரோத்தடைந்த நாடொன்றில் ஒருமித்த சிந்தனையோடு இருப்பது மிகவும் சிரமமானது. அரசாங்கத்தில் வளங்களும் ஆளுமையும் காணப்படுகின்றன. இவற்றை ஊக்கமாகக் கொண்டு செயற்பட்டு வளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button