எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
அடுத்த ஆறு மாதங்களுக்கு 92 ஒக்டேன் ரக பெட்ரோல் கொண்ட ஐந்து சரக்கு கப்பல்களை வழங்குவதற்காக சிங்கப்பூரை தளமாகக் கொண்ட விட்டோல் ஆசியா லிமிடெட்(M/s Vitol Asia Pte. Ltd) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான முன்மொழிவை இலங்கை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
ஏப்ரல் 15, 2025 முதல் அக்டோபர் 14, 2025 வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) 92 ஒக்டேன் பெட்ரோல் ஏற்றுமதியை வழங்க மொத்தம் ஏழு விநியோகஸ்தர்கள் ஏலங்களை சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழு மற்றும் சிறப்பு கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சிங்கப்பூரில் உள்ள விலைமனுதாரரான விட்டால் ஆசியா லிமிடெட் நிறுவனத்திற்கு கொள்முதலை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.