கின்னஸ் உலக சாதனைக்காக தயாராகி வரும் கொழும்பு துறைமுக நகரம்

கின்னஸ் உலக சாதனைக்காக தயாராகி வரும் கொழும்பு துறைமுக நகரம் | Port City Is Preparing For The Guinness Record

உலகின் மிகப்பெரிய கலைக்கூடம் மற்றும் பிக் பென் போன்ற கடிகாரத்தை அமைக்கவுள்ளதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைக்க கொழும்பு துறைமுக நகரம் தயாராகி வருகிறது.

இது தொடர்பாக அரசாங்கம் ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டு, 25 ஆண்டுகளுக்கு முதலீட்டிற்கான வரி சலுகையை வழங்கியுள்ளது.

இந்த கட்டுமானத் திட்டத்திற்கமைய, முதலில் 2 பெரிய கோபுரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதில் ஒரு கோபுரத்தில் உலகின் மிகப்பெரிய செங்குத்து கலைக்கூடம் அமைக்கப்படவுள்ளது.

மற்றொரு கோபுரம் 7 நட்சத்திர ஹோட்டல் மற்றும் பல நிறுவனங்களை கொண்டிருக்கும். இதன் நிர்மாணப்பணிகளுக்காக 540 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ளது.

இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ள கலைக்கூடம் உலகிலேயே முதன்முதன் முறை எனவும், அது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படும் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button