குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Aswesuma Allowance For Feb To Low Income Adults

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு பெப்ரவரி மாதத்தில் ரூ.3,000 மாதாந்திர கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2024 நவம்பர் முதல் அஸ்வெசும குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நலன்புரி நன்மைகள் சபையினால் நேரடியாக கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அஸ்வெசும குடும்பங்களில் உள்ள முதியர்களை தவிர, கொடுப்பனவு பெற்று வரும் முதியர்களுக்கு தபால்/துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், கடந்த காலங்களில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக குறிப்பிட்ட திகதியில் கொடுப்பனவை செலுத்த முடியாமல் முதியவர்கள் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர், பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவு மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முதல் தபால் மற்றும் துணை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button