கோவிட் தொற்றுக்கு மத்தியில் பேருந்துகளில் அதிகமாக பயணிகள்! முறையிடும் இலக்கங்கள் அறிவிப்பு

தொற்றுநோய் பரவுகின்றபோதும், பொது மற்றும் தனியார் பொதுப் பேருந்துகள், பயணிகளின் கொள்ளளவு வரம்புகளை தொடர்ந்தும் மீறி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பொது மற்றும் தனியார் பேருந்துகள், பயணிகளின் இருக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது.

இது தொடர்பில் பயணிகள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். பேருந்துகளில்  பயணிக்கும்போது தாம் கோவிட் தொற்று அச்சத்தை எதிர்நோக்குவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது சுகாதார அதிகாரிகள், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடாமை குறித்தும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் இந்தக்கருத்து குறித்து எமது செய்திச்சேவை, பொதுசுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை தொடர்புக்கொண்டபோதும் அவர்களை அடையமுடியவில்லை.

எனினும் எரிபொருட்களின் விலையுயர்வை அடுத்து நிதிக்காரணங்களுக்காகவே தாம் அதிக பயணிகளை ஏற்றிச்செல்வதாக பேருந்துகளின் நடத்துனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த நவம்பரில் எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து அனைத்து பேருந்துக் கட்டணங்களும் 20% அதிகரிக்கப்பட்டன.

எனவே பேருந்துகளின் வருமானங்கள் நியாயமானதாகவே உள்ளது.

இதன்காரணமாக பேருந்துகளில் ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு எந்த காரணமும் இல்லை என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம பதிலளித்தார்.

கோவிட் வைரஸ் வழிகாட்டுதலின் கீழ், பேருந்து நடத்துநர்கள் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டால், 1995 என்ற எண்ணும் தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button