சம்பளம் விவகாரம் – போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்

சம்பளம் விவகாரம் - போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் | Teacher Salary Increment Warns Union Action

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் அகில இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சம்பளம் கடந்த மாதமும் தாமதமானது, இதற்கான காரணம் ஆராயப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

20 ஆம் திகதி சம்பளம் வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஆசிரியர்களின் சம்பளம் வலயக் கல்விக் காரியாலயங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

தேவையான அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கவில்லை. எல்லோரும் தங்கள் சம்பளத்திற்காக காத்திருக்கிறார்கள்.

இது ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button