சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் தடிமன் உள்ளிட்டவை இதற்கான அறிகுறிகள்.
இன்புளுவென்ஸா A மற்றும் இன்புளுவென்ஸா B வைரஸ் பரவல் இந்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளன.அவற்றில் குளிர்ச்சியான நாடுகளில் காணப்படும் இன்புளுவென்ஸா A வைரஸ் தொற்று அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் தொற்று ஏனையோருக்கு பரவும் அபாயம் காணப்படுவதால் தொற்று இனங்காணப்பட்ட நபர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
நோய் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள வைத்தியரை உடனடியாக நாடவும்.
வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.