ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடனம் ஆடுவது போன்றதான காணொளி போலியானது
சமூக வலைத்தளத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடனம் ஆடுவது போன்றதான காணொளி போலியானது என பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் காணொளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினுடையது அல்ல, இது தீய நோக்கத்துடன் பரப்பப்படுகிறது.
காணொளியில் உள்ள நபர் ஒரு வித்தியாசமான நபர், இது அவரது தனிப்பட்ட தருணம், அவரை ஜனாதிபதியாக காட்டுவதற்காக திரிபுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த காணொளி காட்சிகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என தெரிவித்து பகிர வேண்டாம் என்று காசிலிங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.