ட்ரம்ப் வரி வேட்டை – உலக சந்தையில் மீண்டும் எகிறிய தங்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து திங்களன்று (14) தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டது.

இதன்படி 2025 ஜூன் 23 ஆம் திகதிக்குப் பின்னர் அதிகபட்ச விலையை எட்டிய தங்கத்தின் விலை திங்களன்று GMT 0637 மணியளவில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.1% உயர்ந்து 3,359.69 அமெரிக்க டொலர்களாக (USD) காணப்பட்டது.

மேலும், அமெரிக்க தங்க நிலவரம் 0.3% உயர்ந்து 3,373.30 அமெரிக்க டொலர்கள் விலையை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (14.07.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,010,921 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 285,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,690ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 261,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams)  31,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 249,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button