தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கையில் 22 கரட் தங்கத்தின் விலை 115,200 ரூபாய்க்கும், 24 கரட் தங்கம் 124,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் சற்று வீழ்ச்சி கண்டிருந்த தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததே காரணம் என விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வார இறுதியில் சிறிதளவு சரிவைக் கண்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,835 டொலரை எட்டியுள்ளது.
இருப்பினும், அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 டொலர் முதல் 1910 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.