தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஓகஸ்ட 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 02 வது வினாத்தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதல் வினாத்தாள் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளது.