நமக்கு நாமே! Whatsappல் இனி உங்களோடு நீங்களே பேசலாம்… சூப்பர் அப்டேட்
வாட்ஸ் அப்பில் Message Yourself எனப்படும் நமக்கு நாமே மெசேஜ் அனுப்பி கொள்ளும் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வபோது புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது இந்த வரிசையில் தற்போது 1:1 சாட் அம்சத்தை (1:1 Chat Feature) வாட்ஸப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்படியென்றால், மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) என்கிற அம்சம் ஆகும். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு நீங்களே சில குறிப்புகளை (Notes), நினைவூட்டல்களுக்கு (Reminders), பொருட்களை வாங்கும் முன் ஷாப்பிங் பட்டியல்களை (Shopping List) அல்லது மற்ற விவரங்களை டெக்ஸ்ட் மெசேஜ் வடிவில் (Text Message Format) அனுப்பி கொள்ள விரும்பினால், இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
சொந்த வாட்ஸ்அப் நம்பர்
இதற்கு முதலில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலிக்கான அப்டேட் வெர்ஷன் உள்ளதா என்று சரிபார்க்கவும்; இல்லையென்றால் வரும் வாரங்களில் அனைத்து அப்டேட்கள் வழங்கப்படும் அதன்பின் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.
பின்னர் வாட்ஸ்அப்பை திறந்து, காண்டாக்ட்ஸ்-க்கு (Contacts) சென்றால் அங்கே உங்களின் சொந்த வாட்ஸ்அப் நம்பர் (Own WhatsApp Number) இருக்கும். அதன் கீழ் “மெசேஜ் யுவர் செல்ஃப்” என்கிற டேக்லைன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
பின்னர் ஒரு புத்தம் புதிய சாட் விண்டோ (Chat Window) ஓப்பன் ஆகும். அதன் வழியாக உங்களுடன் நீங்களே சாட் செய்துகொள்ளலாம்.