பதவி நீக்கப்பட்டார் தேசபந்து தென்னகோன்
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எதுவும் அளிக்கப்படவில்லை.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருநதார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 பேர் ஆதரவாக வாக்களித்தால் பிரேரணையை நிறைவேற்ற முடியும்.
இந்த நிலையில், பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு காவல்துறை மா அதிபர் பதவிக்கான பெயரை பரிந்துரைக்க உள்ளார்.