பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவையை, நாளை 24 ஆம்திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2021 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச்சி மாதம் 5 மே ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான கால எல்லை குறுகியது என்பதினாலாம் ,இதற்காக ஆகக் கூடுதலான ஊழியர்களை பயன்படுத்த வேண்டியிருப்பதாலும் தற்போதைய தொற்று சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக சேவைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதினாலும் திணைக்களத்தின் இந்த சேவை தொடர்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்கள ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கல் சேவையின் www.doenets.lk இணையத்தில் இது தொடர்பான விபரங்கள் உள்ளக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதார்கள் தமது விண்ணப்ங்களை இணையவழி ஊடாக அல்லது Mobile Application செயலியை பயன்படுத்தி சமர்ப்பிக்க முடியம்.
தேவைக்கு அமையாக சம்பந்தப்பட்ட சான்றிதழ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிக்கு அல்லது விண்ணப்பதாரியின் முகவரிக்கு “ஸ்பீட் “தபால் மூலம் அனுப்பப்படும்.