மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்.
வகுப்பறையொன்றில், கொவிட் தொற்று உறுதியான மாணவரிடமிருந்து, ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்துக்கு நேரான தொடர்பினை கொண்டிராத சக மாணவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றாளர் ஒருவரின் நெருங்கிய தொடர்பிலிருந்த, கொவிட் தடுப்பூசியை பெற்றிராத மாணவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.