மீண்டும் நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்?
தற்போது இலங்கையில் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு காரணமாக நேரத்துக்கு வேலை செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜேசப் ஸ்ராலின், இலங்கையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக இணைந்து எதிர்வருகின்ற ஒன்பதாம் (9) திகதி பாரிய ஆர்ப்பட்டம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தமது நியாயமான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தார்.
இலங்கையில் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி நாடாளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தற்போது திருகோணமலை, நுவரெலியா பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் அவர்களுக்கு சாதகமாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்னும் நாடு தழுவிய ரீதியில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபடும் நிலை தோன்றியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசு இவ்விடயத்தில் மெதுவான போக்கை கடைப்பிடிப்பதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.