யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (Jaffna International Airport) விரிவுபடுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைக்கு இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மத்தளை விமான நிலையம் (Mattala international Airport), அவசரத் தரையிறக்கம் தவிர வழமையான விமானப் போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இல்லை என்பது சர்வதேச விமானப் போக்குவரத்து நிபுணர்களின் கருத்தாகும்
அதனடிப்படையில் இலங்கையின் ஏனைய இரண்டு சர்வதேச விமான நிலையங்களான கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதைக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் உள்ளிட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
அதே அடிப்படையில் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளும் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.