ரயில்களின் நேர அட்டவணை டிசம்பர் 5 முதல் மாற்றமடைகிறது!
ரயில்களின் நேர அட்டவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக திருத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரயில்களின் ஓட்டவேகம் 5 மற்றும் 10 நிமிடங்களுக்கு இடையில் வித்தியாசப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.