வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: நிலுவையில் ஆயிரக்கணக்கான எண் தகடுகள் | Vehicle Number Plate Shortage In Sri Lanka

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் எண் தகடுகள் நிலுவையில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் புதிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாகாண இடமாற்றங்கள், சேதங்கள் போன்ற பிற காரணங்களுக்காக விண்ணப்பிக்கப்பட்ட எண் தகடுகள் அடங்கும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எண் தகடுகளை அச்சிடுவதற்கான டெண்டர் ஒப்பந்தம் முடிவடைந்ததால் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.

இதன்காரணமாக மேலதிகமாக பல்வேறு வகையான 15,000 க்கும் மேற்பட்ட புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளைஈ, புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் புதிய வாகனங்களை வாங்கிய உரிமையாளர்கள் கடுமையாக சிரமப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், புதிய மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது எண் தகடுகள் வழங்குவது அவசியம் என்றாலும், எண் தகடுகள் பற்றாக்குறை காரணமாக 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button