வானில் இருந்து மலர்களை தூவ மில்லியன் கணக்கில் செலவிட்ட அரசாங்கம்
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் அரசாங்கம், சமய நிகழ்வுகளுக்காக வானில் இருந்து மலர்களை தூவ கடந்த ஆண்டில் மில்லியன் கணக்கான ரூபாய் பொதுபணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இப்படியான விமான பயணத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் டொலர்கள் செலவாகும் என விமானப்படையின் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பயன்படுத்தப்படும் உலங்குவானூர்தியின் ரகத்திற்கு ஏற்ப செலவு முடிவு செய்யப்படும். பெல் 412 ரக உலங்குவானூர்திக்கு ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் டொலர்கள் செலவாகும்.
பெல் 212 ரக உலங்குவானூர்திக்கு குறைவான தொகை செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் சமய நிகழ்வுகளுக்காக இலங்கை விமானப்படை சுமார் ஆறு உலங்குவானூர்திகள் மூலம் மலர்களை தூவி உள்ளது. மலர்களை தூவுவதற்கான பணத்தை புத்தசாசன அமைச்சு விமானப்படைக்கு செலுத்தியுள்ளது.