வெளியாகியுள்ள டி20 உலககோப்பையின் போட்டி அட்டவணை

வெளியாகியுள்ள டி20 உலககோப்பையின் போட்டி அட்டவணை: இந்தியா பாகிஸ்தான் எந்த குழுவில் தெரியுமா! | Indian Cricket Team T20 2024 Captain Rohith Virat

2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று(5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசி டி20 உலக கோப்பை எதிர் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டி20 உலக கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கிறது.

அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமான், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

குழு எ ,குழு பீ, குழு சி, குழு டி என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

குழு சுற்றிலே இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் மோதுவது போல் ஐசிசி தொடரை வடிவமைத்து இருக்கிறது.

“குழு எ” யில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

“குழு பீ” யில் இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,நமீபியா,ஸ்காட்லாந்து, ஓமான் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

“குழு சி”யில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள்,உகாண்டா,ஆப்கானிஸ்தான்,பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

“குழு டீ”யில் தென் ஆபிரிக்கா, இலங்கை, வங்காளதேசம்,நேபாளம், நெதர்லாந்துஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஜூன் 1-ம் திகதி போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் மோதுகின்றன.

மொத்தம் 55 போட்டிகளை நடைபெறும் இப்போட்டியில் ஆரம்ப சுற்று போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும்.

இத்தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 26 மற்றும் 27ம் திகதிகளிலும், இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button