இலங்கைப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை..! நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

இலங்கைப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை..! நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம் | New Law From Going Abroad For Work

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண்கள் நாட்டிற்குள் விட்டு வெளிநாடு செல்வதை தடுக்கவும் பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிறு குழந்தைகளை உடைய தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சிறுவர் வன்புணர்வுகளுக்கு காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏழாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் பெண்கள் நீதிமன்றில் முன்னிலையாகும் போது அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக காணொளி தொழில்நுட்பம் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button