வாகன உரிமம் வழங்காவிட்டால்…. எம்.பிக்கள் எடுத்துள்ள முடிவு

வாகன உரிமம் வழங்காவிட்டால்.... எம்.பிக்கள் எடுத்துள்ள முடிவு | Mps Who Have Decided Not To Contest Elections

தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய முப்பது சதவீதமானவர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்குக் காரணம் அவர்களைப் பாதித்துள்ள பொருளாதாரம் மற்றும் பிற பிரச்சனைகள்தான்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பல புதிய எம்.பி.க்கள் தமது தேர்தல் பிரசார செலவுகளை கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.பிக்களாக நியமனம் செய்யப்பட்டவுடன் வழங்கப்பட்ட வாகன உரிமத்தை விற்று தங்களின் பிரசார செலவுகளை ஈடுகட்டினர்.

தேர்தலுக்கு முன் வாகன உரிமம் பெறாவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என பலர் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவுக்கு வருகை தரும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் எம்.பி.க்களுக்கு வாகன உரிமம் வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button