விவசாயிகளிற்கு உதவும் நோக்கில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!
விவசாயிகளின் நெல் கையிருப்புகளை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்ய மறுக்கும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள், நெல் சேகரிப்பாளர்கள் மற்றும் நெல் கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலைக்கு நெல்லினை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு அரச மற்றும் வர்த்தக வங்கிகள் மூலம் சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்காக இந்த வருடம் (2024) நெல்லுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டதனால், தற்போது வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கிலோவுக்கு 70முதல் 80 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாகவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், 2017ஆம் ஆண்டுக்கான நிதியுதவியை அரசாங்கம் வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் சேகரிப்பாளர்கள் மற்றும் நெல் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவு திட்டத்திற்காக மானிய வட்டி விகிதத்தில் 09 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலைக்கு வியாபாரிகள் கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் குறித்த நிறுவனங்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.