வடக்கு, கிழக்கு உட்பட 86 கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்
86 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து 45,000 ஒரேஞ் மரங்களை நட விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின்படி ஒரேஞ்செடிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மொனராகலை 03 கிராமங்கள், மாத்தறை 01, குருநாகல 08, குளியாபிட்டிய 09, கேகாலை 08, கம்பகா 09, களுத்துறை 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பந்தோட்டை 08, அனுராதாபுரம் 02, திருகோணமலை 02, பொலநறுவை 02,அம்பாறை02,மாத்தளை04,காலி08,மட்டக்களப்பு02, யாழ்ப்பாணம் 03, கண்டி 04 என 86 கிராமங்கள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் ஒரேஞ்சுக்கு சர்வதேச சந்தையில் பாரிய தேவை உருவாகியுள்ளதுடன், சர்வதேச சந்தையில் ஒரேஞ்சுப்பழத்தின் மீதான ஏகபோக உரிமை இலங்கைக்கு இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.