முகநூலில் மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை!
முகநூலில் நாளுக்கு நாள் போலி கணக்குகளுடாக ஏமாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது.
சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் முகநூலில் மேசஞ்சரில் தொடர்புகொண்டு ஏமாற்றும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், முகநூலை ஹக்செய்து அவர்களுக்கு தெரிந்த நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவும் கேட்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து குழுவில் இணைக்க ஒரு எண் ( OTP) வந்திருக்கும் என்று கேட்பார்கள். அதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் திருடிவிடுவார்கள்.
“ Hello I’m contesting for an ambassadorship spot at an online Facebook access program can you pls vote for me ” இவ்வாறு தான் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
நாம் பதில்களை வழங்கும் போது பின்னர் “ You have to send me your number so I can add you to the voting group” இவ்வாறு பதிலனுப்புகின்றனர்.
இவ்வாறான கேள்விகளுக்கு நீங்கள் பதிலனுப்பும் போது உங்களது வங்கிக்கணக்கு உள்ளிட்ட ஏனைய தனிப்பட்ட தரவுகள் ஹக் செய்யப்படுகிறது.
பின்னர் ஹக்செய்யப்படும் முகநூல் கணக்குகள் அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டு ஏனையவர்களை நம்பும் படி இவ்வாறு இணைத்துவிடுவார்கள்.
எனவே இணையத்தில் எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள். அத்துடன் உடனடியாக தீர்மானம் எடுத்து உங்களது தனிப்பட்ட தரவுகளை வழங்கி விடாதீர்கள்.
முதலில் தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள். இவ்வாறான ஹக்கர்கள் தொடர்பில் முகநூலில் முறையிடுவதற்கான வழிகள் உள்ளன. முறையிட்டு Block செய்யுங்கள்.” என கூறப்படுகிறது.