டுபாய் செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டிற்கு மக்கள் இலகுவாக வந்து செல்வதற்காக புதிய விசா முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்கும் விரைவாகவும் மாற்றுவதற்கு “Work Bundle” என்ற புதிய தளமொன்றை ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்னதாக இருந்த விசா முறைமையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்களை பெறுவதற்கு சுமார் 30 நாட்கள் வரை எடுக்கும், அதேசமயம் 16 வகையான ஆவணளையும் சமர்பிக்க வேண்டும்.

இந்நிலையில், இந்த புதிய விசா நடைமுறையின் மூலம் தற்போது வெறும் 5 நாட்களில் டுபாய் விசாவினை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த செயன்முறையின் மூலம் விசா பெறுவதற்கு 5 ஆவணங்கள் மட்டும் சமர்ப்பித்தால் போதும் என கூறப்படுகிறது.

இது தொடர்பில் அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Work Bundle தளம் அரச நடைமுறைகளை எளிமையாக்கும் என்றும் இது விரைவாக மக்கள் டுபாயில் வந்து தங்குவதற்கான செயல்முறைகளை விரைவானதாக மாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதன் முதற்கட்டம் Invest in Dubai தளம் மூலம் டுபாயில் செயல்படுத்தப்படும் எனவும் மற்றைய அரச டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாக இணைக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button