வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்!
அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு முன்மொழியப்பட்ட பின்னர் வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைக்கான கட்டணம் கடந்த ஜனவரி மாதம் திருத்தியமைக்கப்பட்டது.
அதன்படி, வாகனங்கள் பெரும் கட்டுப்பாடுகளின் கீழ் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் புதிய வாகனங்களை இறக்குமதி செய்ததன் பின்னர் வாகனங்களின் தற்போதைய உள்ளூர் சந்தை விலைகள் அதிகரிக்கும் என சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு முதல் தனியார் வாகன இறக்குமதியை படிப்படியாக தளர்த்த எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.