இரண்டே மாதங்களில் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த பகுதி பணம் வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பணம் கிடைத்தவுடன் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, அதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வரி குறைப்பு ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை, அதிபர் தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.