பழங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
பழங்களின் விலை பாரியளவில் குறைந்துள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம், கிராமப்புற பழங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதால், சந்தையில் பழங்களின் தேவை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் தர்பூசணி, தோடம்பழம்,மற்றும் மாம்பழம் என பல வகையான பழங்களின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிலோ கிராம் தர்பூசணி 120 ரூபாவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, அனைத்து வகையான மரக்கறி வகைகளின் விலைகளும் சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.