இலங்கையில் அறிமுகமாகவுள்ள அதிசொகுசு விடுதி…!
கொழும்பில் உள்ள அதி சொகுசு விடுதியான ITC ரத்னதீப, இந்த ஆண்டு (2024) ஏப்ரல் 25 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொழும்பு 01 இல் காலி வீதியில் அமைந்துள்ள இந்த ITC ரத்னதீபா விடுதியானது, தலைநகர் கொழும்பில் அறிமுகமாகவுள்ள ITC விடுதிகளில் முதலாவது சர்வதேச விடுதியென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடுதியானது, புகழ்பெற்ற ITC குழுமத்திற்குச் சொந்தமான துணை நிறுவனமான வெல்கம்ஹோட்டல்ஸ் லங்கா (WelcomHotels Lanka Ltd) இனால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் முதலாவது வியாபார அபிவிருத்தித் திட்டமாக அமைந்துள்ளது.
ஐடிசி ரத்னாதிபா என்று பெயரிடப்பட்ட இந்த விடுதியானது சஃபையர் ரெசிடென்சிஸ் எனப்படும் சொகுசு குடியிருப்பு மேம்பாடுடன் 5.86 ஏக்கர் நிலப்பரப்பில் கடலின் அழகைப் பார்க்கும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவிரவும், 30 மாடிகளை உடைய விடுதி மற்றும் 50-அடுக்கு குடியிருப்பு, தரையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் ஒரு பாலத்துடன் இணைக்கப்பட்டதாக கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடம், ஒரு பொறியியல் சாதனையாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.