இலங்கையில் சடுதியாக உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை…!

இலங்கையில் சடுதியாக உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை...! | The Price Of Lemons Reaching The Peak In Srilanka

வெப்பமான காலநிலை நிலவிவரும் நிலையில், இலங்கையில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21) ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை, பாரிய அளவு குறைவடைந்திருந்ததாகவும் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் வறட்சியான வானிலையினால் எலுமிச்சம் பழத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button