எதிர்க்கட்சி அமைதி – அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி குமுறல்!
இலங்கையில் அரசாங்கம் தனியான ஒரு திசையில் பயணிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான பதினொரு (11) கட்சிகளும் வேறு திசையில் பயணிக்கின்றோம் என்றும், தாம் பயணிப்பது தேசியவாத இடதுசாரி திசையென்பதையும், இது தங்களுக்கு ஒத்துவராது என்றும் தெரிவித்தார்.
அரசின் திட்டங்கள் தமக்கு ஒத்துவராது என்றும் எதிர்காலத்தில் 11 சகோதரக் கட்சிகளும் அரசிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சகல தீர்மானங்களும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோராலேயே எடுக்கப்படுவதாக இணையவழி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் அரசியல் ரீதியாக செயலிழந்துள்ளார். அவர் அரசியலிலிருந்து விலகவேண்டும் என்றார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் வாக்களித்த மக்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அழித்து மற்றும் இழந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.