இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பில், இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன.
அதன்படி ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடும்போது இறக்குமதி செலவு பாரிய அதிகரிப்பை காட்டுகிறது.
அந்த வகையில் மொத்த ஏற்றுமதி வருமானம் 2030 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாகவும் இறக்குமதி செலவினம் 2890 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.