எட்டு நாடுகளுக்கு நேரடி விமான சேவை – இலங்கை விமான சேவை
எட்டு நாடுகளுக்கு நேரடி விமான சேவை – இலங்கை விமான சேவை
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகள் யாவும் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்திருந்தது. இருப்பினும் இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறையில் பல்வேறு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை விமான சேவை எட்டு நாடுகளுக்கு தனது நேரடி விமான சேவையை ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வர வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
ஹொங்கொங், கொரியா, கென்யா, ஜேர்மனி, ரஷ்யா, அவுஸ்திரேலியா, நேபால் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கே இலங்கை விமான சேவை நேரடியாக இயங்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.