ஐபிஎல் 2025: வரவிருக்கும் புதிய விதி!

ஐபிஎல் 2025: வரவிருக்கும் புதிய விதி - ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி | 2025 Sports Ipl Retention Rules Are To Be Changed

அடுத்த  ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  புதிய விதி முறை ஒன்று நடைமுறைபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 இல் ஐபிஎல் தொடர் ஏலத்தில் 4 வீரர்களை மட்டுமே ஒரு அணியில் தக்கவைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா ஏலத்தில் பல வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் மாற வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் 5 வீரர்களை மட்டுமே ஒரே அணியில் தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால் தற்போது நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறையின் படி, 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும்.

2 வீரர்களை ரைட் டூ மேட்ச் என்ற விதியின் மூலம் அதே அணியால் வாங்கமுடியும். ரைட் டூ மேட்ச் எனப்படும் முறையில் வேறு அணியால் வாங்கப்பட்ட வீரரை அதே தொகைக்கு திரும்ப வாங்கிக்கொள்ளும் முறைப்படி ஒரு வீரரை அணியில் வைத்துக்கொள்ளலாம் என்ற வகையிலும் மாற்றம் நிகழலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு வாரத்தையில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைத் தக்கவைக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரலாம் என சில அணியின் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

ஆனால் அவ்வாறு செய்தால் ஏலத்திற்கான சிறப்பம்சமே அழிந்து விடும் என இந்திய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும் எந்த அணியில் எந்த வீரர்கள் விளையாடுவர்கள் என்று தெரியாமல் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button