சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டோக் கணக்குகள்
சர்வதேச ஊடகம் ஒன்று உட்பட பல முன்னனி நிறுவனங்கள் மற்றும் பிரபல கணக்குகளை குறி வைத்து நடந்த சைபர் தாக்குதலை நிறுத்த டிக்டோக் (TikTok) நடவடிக்கை எடுத்துள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டோக் கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டிக்டோக் சமூக ஊடக வலையமைப்பை வைத்திருக்கும் Bytedance நிறுவனம் கூறுகிறது.
குறிப்பாக, பல முன்னனி நிருவனங்களை சேர்ந்த டிக்டோக் கணக்குகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் டிக்டோக் கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.
அவற்றில் சிஎன்என் (CNN) மற்றும் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலமான நிறுவனங்களின் கணக்குகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.