மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய புதிய நகரம் விரைவில்.!

மக்களுக்கான சகல வசதிகளும் கூடிய புதிய நகரம்: அரசு வெளியிட்ட தகவல் | New Luxury Town In Colombo

மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய புதிய நகரத்தை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிபர் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனுமதியற்ற நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அமைச்சரவையின் உத்தரவை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரத்தை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்காக மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, புதிய நகரை உருவாக்குவது குறித்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்திட்டம் வெற்றியடையும் அத்தோடு இது போன்ற வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

எனவே, வெள்ளத்தை கட்டுப்படுத்த அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் நில மீட்பு பணியை நிறுத்த அமைச்சரவை உத்தரவு கிடைக்கும் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளாார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button