அரச ஊழியர்களுக்கான தடை தாண்டல் பரீட்சை: வெளியான விசேட அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கான தடை தாண்டல் பரீட்சை: வெளியான விசேட அறிவித்தல் | Eb Examinations For Government Officers Notice

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (Development Officers ) சேவையின் தரம் I, II மற்றும் III ஆகிய உத்தியோகத்தர்களுக்கான வினைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதிபத்திரத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.

குறித்த அறிவித்தலானது இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வி​​னைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் 2024 ஜூன் மாதம் 30 நடைபெறவுள்ளது.

அதற்காக 52,756 விண்ணப்பித்துள்ளதுடன், நாடு முழுவதும் 353 நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளது.

பரீட்சை அனுமதிப் பத்திரம் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் https://revisions.slida.lk என்ற முகவரியைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button