முதலாம் தர மாணவர் அனுமதி : வெளியான முக்கிய தகவல்
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமத்துவமான கல்வியை வெளிப்படைத்தன்மையுடன் முறைகேடுகளைக் குறைக்கும் வகையில் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கடந்த வருடங்களில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய சுற்றறிக்கையை மீளாய்வு செய்து 2025 ஆம் ஆண்டு மற்றும் அடுத்த வருடங்களில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் புதிய மதிப்பீட்டு செயல்முறையின் கீழ் மாணவர்கள் 2029 ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுப்பார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.