கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Kehalia Rambukwella) உள்ளிட்ட 7 சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹலிய உள்ளிட்டோரை ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (12) உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.