ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதமான வாக்குகளை பெறாவிடின் நடக்கப்போவது என்ன..!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாவிடின் எந்த சிக்கலும் ஏற்படாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
அப்படி 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறாவிடின் அடுத்தகட்டமாக ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் தெளிவாக உள்ளன.
அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த விடயத்தில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் தெளிவாக இருக்கின்றன. அதனை நாங்கள் செயற்படுத்தி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் யார் என்பதை அறிவிப்போம் என்று ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது.