லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் (Liter gas) விலையில் மாற்றம்ஏற்படுத்தப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் வழமை போன்று இன்று நள்ளிரவில் இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) அறிவித்துள்ளது.
இன்று (31.7.2024) நள்ளிரவில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.